இந்தியாவில் முதன்முதலாக பாரத ஸ்டேட் வங்கி, கார்டு இல்லாமலே என்ற திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. தற்போது HDFC வங்கியும், கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முறையை கொண்டு வந்துள்ளது.

பணம் எடுப்பது எப்படி?:
1. முதலில் ஹெச்.டி.எப்.சி வாடிக்கையாளர்கள் www.hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று, உள்நுழைய வேண்டும்.
2. பின்பு HDFC Bank NetBanking >>Funds Transfer >> Request என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்
3. இப்போது Add a beneficiary என்பதை கிளிக் செய்ய வேண்டும்
4. யாரெல்லாம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம் என்பதை தீர்மானித்து, அவர்களுடைய விபரங்களை டைப் செய்யவும்.
5. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என ஒரு நாளைக்கு 7 பேர் வரையில் யாரை வேண்டுமானாலும் இணைக்கலாம்.
6. இணைக்கப்படும் நபர்களுக்கு ஹெச்.டி.எப்.சி வங்கியில் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
7. 30 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் வேண்டுகோள் விடுத்த நபர்கள் உங்கள் வங்கிக்கணக்கோடு இணைக்கப்பட்டு விடுவார்கள்
8. இவ்வாறு இணைந்த நபர்கள் எந்த ஊரில், எங்கு இருந்தாலும் அவர்கள் அருகிலுள்ள HDFC ஏடிஎம்மில் இருந்து பணம் பெற முடியும்.
9. இந்த வசதி 24 மணி நேரம் வரையில் மட்டுமே இருக்கும். அதற்குள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாக வேண்டும்.
10. அதற்குப் பிறகு பணம் எடுக்க வேண்டுமென்றால், மீண்டும் ஒரு முறை ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் மேற்கண்ட முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.