- ஒரு கேமராவினைக் கொண்டு ஊரில் உள்ள இயற்கைக் காட்சிகள், சுற்றுலா இடங்கள், குறைவான விலையில் பொருட்கள் வாங்கக் கிடைக்கும் இடங்கள் என உங்களுக்கு எது எளிதோ அதனைப் பற்றி வீடியோ தயாரியுங்கள்.
இவை அனைத்தும் கடினமாகத் தெரிகிறதா? வீட்டிலேயே சமையல் குறிப்பு சொல்லமா, மருத்துவ குறிப்புகள் , வீட்டினை அலங்காரம் செய்தல் குறித்த குறிப்புகள் என பலவற்றை செய்யலாம்.

- எடுத்த வீடியோவை கணினியில் Movie Maker அல்லது sony vegas pro போன்ற வீடியோ எடிட்டிங் சாப்ட்வேரில் போட்டு சரி செய்தல் வேண்டும்.
- இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.
- இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். இறுதியில் “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.
- உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.
- அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.