டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். டிக்டாக் செயலி குறுகிய காலகட்டத்தில் அதிக வெற்றிபெற்று அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
டிக்டாக் செயலி வெற்றிபெற முக்கியமான காரணம் என்னவென்றால், பேஸ்புக், டிவிட்டர் போல ஃபாலோவர்ஸ் அதிகம் இருந்தால் தான் வீடியோ போஸ்ட், புகைப்படங்கள் போன்றவை அதிகமாக வரும். ஆனால் இந்த டிக்டாக் செயலி
இந்த டிக்டாக் செயலி 175நாடுகளில் 75மொழிகள் பயன்படுத்துகின்றனர். முதலில் இந்த டிக்டாக் செயலியில் விளம்பரங்கள் தொல்லை இல்லை, இப்போது வாடிக்கையாளர்கள் அதிகமானதால் விளம்பரங்கள் அதிகமாக கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

மேலும் டிக்டாக் செயலி மூலம் நாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம், ஆரம்பத்தில் டப்ஸ்மேஷ் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று இருந்த இந்த தளத்தில் படிப்படியாக டெக்,விளையாட்டு, சமையல், பயணம், சிரிப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் வெளிவந்தது.
உதாரணமாக ஒருவர் யூடியூப் -ல் டெக் சம்பந்தமாக நிறைய வீடியோக்களை அப்லோட் செய்கிறார் என்றால், அந்த வீடியோவில் அமேசான் லிங்க் இருக்கும. அந்த லிங்க்-ஐ வேறு ஒரு பயனர் கிளிக் செய்து நுழைந்தார் என்றால், பயனர் எந்த பொருள் வாங்கினாலும் அமேசானில் இருந்து அந்த டெக் வீடியோ பதிவிட்டவருக்கு ஒரு கமிஷன் கிடைக்கும்.
இதுபோல உங்கள் டிக்டாக் பக்கம் அதிக பிரபலமாக இருந்தால் நீங்களும் ஒரு யூடியூப் சேனல் உருவாக்கலாம், அந்த யூடியூப் சேனலின் லிங்க்-ஐ டிக்டாக் செயலியின் profile பக்கத்தில் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் யூடியூப் சப்ஸ்கிரைபர் அதிகரிக்கும், பின்பு வீடியோ வியூ அதிகிரிக்கும், இதன் மூலம் எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும். விரைவில் டிக்டாக் செயலியில் நேரடியாக வருமான பகிர்வு வசதி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.