ஜியோவின் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவை இன்று அறிமுகம் ஆகவுள்ளது. சோதனையில் உள்ள சந்தாதாரர்களுக்கு 2 மாத இலவச சேவைகள் இன்று முதல் வழங்கப்படும், மேலும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையும் திரும்ப செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஃபைபர் சேவைக்கான முன்பதிவினை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். JioFiber Registration வலைத்தளம் வழியாக GigaFiber Broadband சேவைக்கான முன்பதிவை செய்ய இதனைப் பின்பற்றவும்

1.முதலில் ஜியோஃபைபரின் Registration வலைத்தளத்திற்குள் நுழையவும். அந்த லிங்க் இதுதான் https://gigafiber.jio.com/registration.
2. அந்த லிங்கிற்குள் பெயர், முகவரி, அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற பயனாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
3. இந்த விவரங்களை தெளிவாக நிரப்பவும், இது முதற்கட்ட Registration என்பதால் இவை சரியாக முடிந்ததும், நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பிவைக்கப்படும்.
இவை சரியாக முடிக்கப்பட்டு இருந்தால், நிறுவனத்தின் சார்பில் நீங்கள் பதிவு செய்த பகுதியில் ஜியோஃபைபர் சேவை உள்ளதா என்பது ஆராயப்படும்.
ஒரு
வேளை இருப்பின்,
கடைசி கட்ட உறுதி ஒருமுறை கேட்கப்படும், அதன்பின்னர் விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன்பின்னர் பிராட்பேண்ட் கனெக்ஷன் 1 முதல்
3 நாட்களுக்குள் நிச்சயம் கிடைத்துவிடும்.