உங்கள் வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் வரும்போது, அவசர அவசரமாக உங்கள் காதில் இயர்போனை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடியோ மெசேஜ் வரும்போது இயர்போனுக்கு பதிலாக போனை காதருகே கொண்டு போன் அழைப்பில் பேசுவது போல் செய்யலாம்.
அவ்வாறு காதருகே கொண்டு சென்றால் உங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் ஆடியோ உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கரில் கேட்காது. போன் அழைப்பை பேசும்போது கேட்பது போலவே இருக்கும்.

இதற்கு நீங்கள் வாட்ஸ் அப் ஆடியோ ஃபைலில் உள்ள வாக்கி-டாக்கி என்ற வசதியை பயன்படுத்த வேண்டும். இந்த வசதியை மெசேஜ் டைப் செய்வதற்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்
இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அடுத்த முறை ரகசியமாக இயர்போனில் உங்கள் வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ்களை கேட்பதற்கு பதிலாக இந்த முறையின் மூலம் தர்மசங்கடமின்றி கேட்கலாம்.
ஆனால் அதே
நேரத்தில் இந்த டெக்னிக், வாட்ஸ் அப்பில் இருக்கும் ஆடியோ ஃபைலுக்கு மட்டுமே பொருந்து என்பதும்,
வீடியோவுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.