ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையினை இணைப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
1. http://www.nvsp.in/ என்ற தளத்திற்குள் செல்லவும்.
2. பெயரை வைத்துத் தேடவும் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
3. அடுத்து பெயர், தந்தை/கணவர் பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
4. அடுத்து தொகுதி அல்லது கூகுள் மேப்பில் இடத்தைத் தேர்வு செய்து, உங்களுக்கு அளிக்கப்படும் குறியீட்டை உள்ளிடவும்.

5. தகவல்களை உள்ளிட்ட பிறகு தேடவும் என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
6. அடுத்து ஆதார் எண்ணை ஏற்றவும் என்ற ஆப்சன் இருக்கும்.
7. அதனைத் தேர்வு செய்யவும், அடுத்து புதிதாக ஒரு திரை தோன்றும்.
8. அடுத்து திரையில் வாக்காளர் அடையாள் அட்டை எண், ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்றவற்றை உள்ளிடவும்.
9. பின்னர் சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.