உங்களது ஆதார் கார்டை வாக்காளர் அட்டையுடன் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவும் இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
- ECILINK <வாக்காளர் அட்டை எண்> <ஆதார் எண்> என்று டைப் செய்து கொள்ளவும்.
- இதனை 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

தொலைபேசி அழைப்பு மூலம் இணைப்பது எப்படி?
இந்த சேவையானது அனைத்து நாட்களிலும் பயன்படுத்த முடியாது. மேலும் இதனை வாராந்திர நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்படும்.
மேலும் 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் விவரங்களை கூறவேண்டும்.
வாடிக்கையாளர் சேவை மையத்தின் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.