போலி வாக்காளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைக்க அரசாங்கம் முடிவெடுத்து இது குறித்து அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது ஆன்லைனில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.
அதாவது ஆதார் கார்டை வாக்காளர் அட்டையுடன் எஸ்எம்எஸ் அனுப்பி, எளிதான செயல்முறை மூலம் இணைக்கலாம்.

அதாவது
ECILINK <வாக்காளர் அட்டை எண்> <ஆதார் எண்>
என்று டைப் செய்து 166 அல்லது 51969 என்ற எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
அல்லது
தொலைப்பேசி அழைப்பின் மூலம் இணைத்தல்:
1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் விவரங்களை கொடுத்து இணைக்க முடியும்.