ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்தல் என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகும். இதனை இப்போது நாம் ஆன்லைனில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
1. https://incometaxindiaefiling.gov.in/#innerlink என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
2. அடுத்து லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு இருந்தால் லாக் இன் செய்யலாம்.

3. இல்லையேல் New Register ஆக அக்கௌண்ட்டை ஓப்பன் பண்ணவும்.
4. அடுத்து யூசர் ஐடி, கேப்சா கோடு டைப் செய்து அடுத்த பக்கத்துக்குச் செல்லவும்.
5. அங்கே உள்ளே நான்கு ஆப்ஷன்களில் ஓடிபி ஐ தேர்வு செய்யவும்.
6. அடுத்து உங்களின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து ஓடிபி பெறவும்.
7. அடுத்து பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.
8. பாஸ்வேர்டை மாற்றி 12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்.
9. அடுத்து பாப் அப் விண்டோவில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா என்ற கேள்வி வரும்.
10. அடுத்து லிங் செய்து, புரொபைல் செட்டிங்கில் நமது பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கொடுக்கவும்.
11. கொடுத்த தகவல்களுடன் பொருந்தினால் ஆதார் எண் கேட்கப்படும்.
12. அந்த எண்ணை உள்ளிட்டு லிங் நவ் என்பதை கிளிக் செய்யவும்.
13. உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.