பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப், இந்தியாவினை அடுத்து பிரேசிலில்தான் அதிகப் பயனர்களைக் கொண்டுள்ளது. இதனால் வாட்ஸ் அப் பே சேவையானது முதல் கட்டமாக பிரேசிலில் அறிமுகமாகியுள்ளது. இது விரைவில் உலகம் முழுவதும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் பே- ஐ நிறுவுவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

1) ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி குறியீட்டை அழுத்தவும்.
2) payments வசதியை தேர்வு செய்யவும்
3) Add Payments Method -யை அழுத்தி, Accept and Continue என்பதை அழுத்தவும்.
4) இப்போது உங்கள் வங்கி பெயரை தேர்வுசெய்யவும்
5) பின்னர் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்து உங்கள் வங்கி பற்றிய தகவல்களை இச்செயலி எடுத்துக் கொள்ளும்
6) அடுத்து Verify via SMS என்பதை அழுத்தி உங்களது வங்கிக்கணக்கை SMS வாயிலாக சரிபார்க்கவும்
7) அடுத்து Done என்பதை அழுத்தி நிறுவல் செயல்முறையை முடித்துக் கொள்ளவும்.