How to

கூகுள் க்ரோம் பிரவுசரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி?

சில சமயங்களில் பிரவுசரில் டேப்களை திறந்து வைத்திருந்தால் ஸ்மார்ட்போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதுடன், அதன் வேகமும் குறையத்துவங்கும். 

கூகுள் க்ரோமின் புதிய அப்டேட் கொண்டிருக்கும் வசதியில் பிரவுசரின் செயல்திறனை மேம்படுத்த பிரத்யேக அம்சம் வழங்கப்படுகிறது. இதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

இவ்வாறு செய்யும் முன் கூகுள் க்ரோம் பிரவுசரின் மேம்பட்ட பதிப்பினை இன்ஸ்டால் செய்திருக்கின்றீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் ஸ்மார்ட்போனில் சீரான இணைய இணைப்பு இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இந்த அம்சம் மேக் மற்றும் விண்டோஸ் பிரவுசரிலும் வழங்கப்படுகிறது. 

கூகுள் க்ரோம் பிரவுசரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி?




வேகத்தினை அதிகரிப்பது எப்படி?:

கூகுள் க்ரோம் பிரவுசரை திறந்து மேல்புறம் இடதுபக்கத்தில் இருக்கும் மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும். – மெனு ஆப்ஷனில் செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். – சிஸ்டம் ஆப்ஷனில் ‘Use hardware acceleration when available’ எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். – இனி இந்த அம்சத்தை ஆன் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். – அடுத்த க்ரோம் பிரவுசரை ரீ-லான்ச் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். – இவ்வாறு செய்ததும் பிரவுஸ் செய்ய துவங்கலாம். 


இவைதவிர க்ரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்க வேறு சில வழிமுறைகளும் இருக்கின்றன. இதற்கு தேவையற்ற டேப்கள் திறந்திருக்கும் பட்சத்தில் அவற்றை மூடலாம். தேவையான வலைத்தளங்களை புக்மார்க் செய்து கொண்டு அவற்றை பயன்படுத்தலாம். 


பிரவுசரில் பல்வேறு எக்ஸ்டென்ஷன் மற்றும் ஆட்-ஆன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். எக்ஸ்டென்ஷன்களை நீக்குவதும் பிரவுசரின் செயல்திறனை ஊக்குவிக்கும். 


Related posts

விவா வீடியோ செயலி மூலம் வீடியோக்களை ட்ரிம் செய்வது எப்படி?

TechNews Tamil

Google Pay வினைப் பயன்படுத்தி எப்படிப் பணம் செலுத்துவது?

TechNews Tamil

ஃபாஸ்டேக்கில் எவ்வாறு பதிவு செய்வது?

TechNews Tamil