யூடியூப் சேனல் தொடங்கி சாம்பாதிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதேபோல் பிளாக்கர்கள் மூலமும் பணம் சம்பாதிக்கமுடியும். முதலில் பிளாக்கர் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
1.முதலில் கூகிள் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும்.
2.https://www.blogger.com/ என்கிற லிங்கை கிளிக் செய்யுங்கள் அல்லது பிளாக்கர் (blogger) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. “CREATE BLOG” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. உங்கள் தொழிலுக்கு உதவுகின்ற வகையிலான வெப்சைட்டுக்கான பெயரினை தேர்ந்தெடுத்து Title இல் உள்ளிடுங்கள்.
5. அதேபோல் உங்கள் தளத்திற்கான இணைய முகவரியை address இல் பதிவிடுங்கள். இது இலவச வெப்சைட் என்பதால் கூகிளின் அடையாளம் .blogspot.com என்பது சேர்ந்தே வரும்.
6. அதன்பின்னர் வெப்சைட்டுக்கு தகுந்த படியான Theme ஐ தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
7. உங்களுடைய Dashboard பக்கம் தற்போது ஒப்பன் ஆகும்.
8.இதில் “New Post” என்பதை கிளிக் செய்து பதிவிடலாம்.