பப்ஜி வீடியோ கேம் அனைவராலும் பிரபலமாக விளையாடப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் பப்ஜி லைட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பப்ஜி பீட்டா விளையாட்டினை விளம்பரப்படுத்தும் வகையில், ஜியோவுடன் சேர்ந்து ஆஃபர்களை வழங்குகிறது.

ஜியோவில் ‘பப்ஜி’ கிப்ட் பெறும் முறை:
படி 1: பயனாளர்கள் முதலில் https://gamesarena.jio.com
என்ற இணையதள பக்கத்துக்குச்
சென்று பார்ம் நிரப்ப வேண்டும்.
படி 2: இதனை உறுதி செய்யும் வகையில், பயனாளர்களின் இமெயில் முகவரிக்கு ஜியோ
தரப்பில் இருந்து வெர்பிகேஷன் லிங்க் அனுப்பப்பட்டிருக்கும். அந்த லிங்கை க்ளிக்
செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
படி 3: இமெயில் முகவரி, பயனாளர்கள் தகவல்கள் உறுதி செய்யப்பட்டவுடன், ரிடெம்ஸன் கோடு (Redemption code) வழங்கப்படும்
ரிடெம்ஸன் கோடு (Redemption
code) பயன்படுத்துவது
எப்படி?
படி 1: பப்ஜி லைட் வெர்ஷனை முதலில் பதிவிறக்கம் செய்ய
வேண்டும்
படி 2: மெயின் மெனுவல் சென்று Add
Bonus/ Gift Code என்று
ஆப்ஷன் இருக்கும்
படி 3: அதனை க்ளிக் செய்து, ஜியோ வழங்கிய redemption code அப்படியே பதிவு செய்ய வேண்டும்.