How to

ஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி?

ஆப்பிள் ஐபோன் தான் என்றாலும், அன்றாட பயன்பாடுகளில் ஒருநாள் அதுவும் பாழாகத் தான் செய்யும். எல்லா ஸ்மார்ட்போன் மாடல்களின் பேட்டரிக்கும் இதே நிலை தான். சில ஆண்டுகள் கழிந்ததும் பேட்டரியில் பிரச்சனை ஏற்படும். அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் ஆயுள் எப்படி இருக்கிறது, அதனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை கண்டறியும் வழிமுறைகளை பார்ப்போம்.

1: ஐபோனின் செட்டிங்ஸ் ஆப்ஷனிற்கு செல்லவும்.

2: செட்டிங்ஸ் பகுதியில் பேட்டரி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3: பேட்டரி ஹெல்த் எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

ஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி?

4: இனி பேட்டரியில் எத்தனை அளவு சார்ஜ் இருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

5: பேட்டரி அளவை காண்பிக்கும் பகுதியின் கீழ் பீக் பெர்ஃபார்மன்ஸ் கேபபிலிட்டி எனும் ஆப்ஷன் இருக்கும்.

6: ஆப்ஷனில் “Your battery is currently supporting normal peak performance” எனும் வாசகம் தெரிந்தால், உங்களது ஐபோன் பேட்டரி சீராக இருக்கிறது. அதனை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

7: முந்தைய ஆப்ஷனின் போது “Your battery’s health is significantly degraded. An Apple Authorized Service Provider can replace the battery to restore full performance and capacity,” எனும் வாசகம் திரையில் தோன்றினால், உங்களது பேட்டரி சீராக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே ஐபோனின் பேட்டரி ஆயுள் பற்றி மிக எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

Related posts

வீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

TechNews Tamil

ZIP பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி?

TechNews Tamil

கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி?

TechNews Tamil