How to

ரயில்வே தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அறிவது எப்படி?

இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி, மேக் மை ட்ரிப் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான் வாட்ஸ்அப் மூலம் ரயில் சேவை குறித்தான தகவல்களை பெற முடியும்.

பிஎன்ஆர் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வதற்கான வழிகள்:

1.உங்கள் மொபைலில் உள்ள கான்டேக்ட்ஸில் மேக் மை ட்ரிப் தளத்தின் வாட்ஸ்அப் எண்-ஐ (7349389104) சேமித்துக் கொள்ளவும்.

2.இதையடுத்து, வாட்ஸ்அப்-க்குச் சென்று, மேக் மை ட்ரிப் எண்ணுடன் மெஸேஜ் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

ரயில்வே தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அறிவது எப்படி?

3.பிஎன்ஆர் (PNR) என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு உங்களது பிஎன்ஆர் எண்ணை தட்டுங்கள். பிறகு மெஸேஜ் அனுப்புங்கள்.

இதையடுத்து, உங்களது பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தானாகவே தெரியப்படுத்தப்படும்.

வழிகள்:

1.முன்னர் போலவே, மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் எண் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் சாட்டுக்கு சென்று ரயில் எண்ணை மட்டும் தட்டி அனுப்புங்கள். சிறிது நேரத்தில் எப்போது ரயில் கிளம்பியது, எப்போது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அது வந்து சேரும், எப்போது உங்களை இலக்கை அடைவீர்கள் உள்ளிட்டத் தகவல்கள் தெரியபடுத்தப்படும்.

Related posts

கூகுள் க்ரோம் கொண்டு ஸ்கேன் செய்வது எப்படி?

TechNews Tamil

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?

TechNews Tamil

ஊபர் ஆப்பில் Cab புக் பண்ணுவது எப்படி?

TechNews Tamil