நாம் இணையத்தில் இருந்கு ஏதாவது ஒரு பைலை டவுன்லோட் செய்கையில் அந்த பைலில் வைரஸ் இருப்பதாக உங்களது ஆன்ட்டி வைரஸ் சொல்லும். “”உங்கள் ஆன்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம்.
இது தவறான உறுதி” என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள்.
அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் ஒரே தப்பை செய்திடாது. எனவே, டவுண்லோட் ஆகும் பைலைத் திறந்து பார்க்காமல், https://www.virustotal.com/ என்ற இணையதளம் செல்லவும்.

சந்தேகத்திற்கு இடமான பைலை அப்லோட் செய்திடவும். இங்கு 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் கொண்டு, உங்கள் பைலில் வைரஸ் உள்ளதா எனச் சோதனையிடப்பட்டு, முடிவுகள் காட்டப்படும். சில முடிவுகள், வைரஸ் என்று சொன்னால், நிச்சயம் அந்த பைலைச் சந்தேகப்பட வேண்டும்.
நீங்கள் கூகுள் தேடல் மூலம் இந்த பைல் இருக்கும் தளத்தை அறிந்து, அந்த பைலை இன்னொரு தர்ட் பார்ட்டி தளத்திலிருந்து பெற்றிருந்தால், நிச்சயம் அது வைரஸாக இருக்கலாம்.
ஏதேனும் ஒரு வகையில், பைல் ஒன்று வைரஸ் ஆக
இருக்கும் என அறிந்தால், அதனை இயக்காமல் இருப்பது
நல்லது. இறக்கியிருந்தால், அழித்துவிடுவது நல்லது.