How to

தொலைந்துபோன மொபைல் போனை எப்படி கண்டுபிடிப்பது?

ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் வழியாக, மொபைல் போன்  சைலன்ட் மோடில் (Silent Mode) இருந்தாலும், அதை ரிங்டோன் ஒலிக்குமாறு செய்து கண்டுபிடித்துவிடலாம். அதற்கும் ஒரு தந்திரம் உண்டு. 

  • உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கூகிள் குரோம் பிரசரில் இந்த முகவரியில் செல்ல வேண்டும். 
  • https://www.google.com/android/devicemanager
  • அல்லது கூகிள் சர்ச் பாக்சில் Find Your Phone என கொடுத்து, பிறகு அந்த முகவரிக்கு செல்ல முடியும். 
  • அதன் பிறகு உங்கள் ஆன்ட்ராய்ட் போன் இணைக்கப்பட்ட மெயில் முகவரியை கொடுத்து லாகின் செய்ய வேண்டும். 
  • லாகின் செய்து முடித்தவுடன் உங்களுக்கு இதுபோல ஒரு பக்கம் தோன்றும்.
  • அதில் Ring என்பதை அழுத்தினால், உங்கள் மொபைல் போனில் Default ஆக உள்ள Ring Tone ஒலிக்கும்.
தொலைந்துபோன மொபைல் போனை எப்படி கண்டுபிடிப்பது?

அப்போது மொபைல் வைத்திருக்கும் இடத்தின் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.  இது ஒரு மிகச்சிறந்த \ அருமையான வசதி..!

ஆன்ட்ராய்டு போன் தொலைந்து போய்விட்டது. அல்லது வேறு யாரோ திருடிவிட்டார்கள். அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எப்படிகண்டுபிடிப்பது? 

மேற்குறிப்பிட்ட முறையில் கம்ப்யூட்டரில் பிரௌசர் வழியாக டிவைஸ் மேனேஜரை அணுக்க வேண்டும்.   அதற்கு முன்பு நீங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இதை கட்டாயம் செய்திருக்க வேண்டும். 

  • அதாவது  போனில் GPS வசதி ஆன் செய்திருக்க வேண்டும்.   
  • இப்பொழுது டிவைஸ் மேனேஜரை இயக்க வேண்டும். 
  • அதில் Locate Device என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

அவ்வளவுதான். உங்களுடைய மொபைல் இப்பொழுது எங்கு உள்ளது. எந்தெந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 

மொபைல் எங்கெல்லாம் பயன்படுத்தபட்டது என்பதை தெரிந்துகொள்ள “Location History” வசதி உதவும்.

Related posts

கம்யூட்டரில் screenshot எடுப்பது எப்படி?

TechNews Tamil

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

TechNews Tamil

ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் பணத்தை ஆன்லைனில் பெறுவது எப்படி..?

TechNews Tamil