அதாவது தேவையற்ற வாட்ஸ்ஆப் க்ரூப்களில் பிறர் உங்களை ஆட் செய்வதில் இருந்து உங்களை நீங்களே தடுப்பது எப்படி என்பதை காண்போம்.
முதலில், வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய பதிப்பானது உங்கள் Android அல்லது iPhone-ல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் கீழ் தொகுக்கப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றவும்:
– உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியை திறக்கவும்
– உள்நுழைந்து Settings என்பதை கிளிக் செய்யவும்
– பின்னர் Accounts விருப்பத்தை தேர்ந்து எடுக்கவும்

– பின்னர் Privacy-க்குள் நுழையவும்
– அங்கே ‘Groups’ எனும் விருப்பத்தை காண்பீர்கள்
– அதை Tap செய்யவும், உங்களுக்கு மூன்று விருப்பங்கள் கிடைக்கும்: Everyone, My Contacts மற்றும் Nobody.
– இப்போது உங்களுக்கு தேவையான விருப்பதை தேர்ந்தேடுக்கவும்.
ஒருவேளை நீங்கள் Everyone என்பதை தேர்ந்தெடுத்து வைத்திருந்தால், யார் வேண்டுமானாலும் உங்களை ஒரு வாட்ஸ்ஆப் க்ரூபில் சேர்க்கலாம். My Contacts என்பதை தேர்நதெடுத்தால், உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்டில் இருப்பவர்களால் மட்டுமே உங்களை ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் சேர்க்க முடியும்.
Nobody என்பதை தேர்வு செய்தால், யாரவது உங்களை ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் ஆட் செய்யும் போது உங்களுக்கு ஒரு Private invitation அனுப்பப்படும். பின்னர் நீங்கள் அந்த குறிப்பிட்ட க்ரூப்பில் இணையலாமா அள்ளாது வேண்டாமா என்பதை முடிவு நீங்களே செய்து கொள்ளலாம்.