How to

தொலைந்த போன மொபைல் டேட்டாவை எப்படி அழிப்பது?

உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் Settings ==> Security என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். அதில் Device Administrators என்ற ஆப்சனின் கீழ் Android Device Manager என்பதை தேர்வு செய்யுங்கள். 

இந்த அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், மொபைல் உங்கள் கையில் இல்லாத பொழுது பிரௌசர் வழியாக 

  • மொபைல் லாக் செய்யலாம்
    • மொபைலில் உள்ள தகவல்களை அழிக்கலாம்
    • மொபைல் ஸ்கிரீன்லாக் பாஸ்வேர்டை மாற்றலாம். 

மூன்றாவது நபர் யாரிடமாவது உங்கள் மொபைல் சிக்கிக்கொண்டால், மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி மொபைலை அவர் பயன்படுத்த முடியாமல் செய்திட முடியும். 

தொலைந்த போன மொபைல் டேட்டாவை எப்படி அழிப்பது?

மொபைல் தொலைந்துவிட்டது. அது நமக்கு கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. அப்படியானால், கண்டிப்பாக அதில் உள்ள டேட்டாக்களை வேற யாரும்தவறாக பயன்படுத்த கூடாது இல்லையா? அதனால் அந்த டேட்டாக்களை அழிப்பது நல்லது. அந்த காரியத்தையும் இந்த டிவைஸ் மேனேஜர் வழியாக செய்து முடித்துவிடலாம். 

எப்படி மொபைல் டேட்டாவை அழிப்பது?

  • மொபைல் போனில் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். (கட்டாயம்)
  • டிவைஸ் மேனேஜர் – லாகின் செய்து – Erase கொடுத்தால் போடும்.
  • மொபைலில் உள்ள அனைத்து டேட்டாக்களும் “ஸ்வாகா” ஆகிவிடும். (Delete ஆகிவிடும்.) இதைத்தான் துன்பத்திலும் இன்பம்னு நம்ம சொல்லிக்கிறது. 🙂

மொபைல் லாக் செய்வது எப்படி?

தொலைந்தபோன மொபைலை யாருமே பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தால் அதை அப்படியே லாக் செய்துவிட முடியும். அதற்கும் டிவைஸ் மேனேஜரில் வழி உண்டு. 

எப்படி லாக் செய்வது?

  • டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்ய வேண்டும்.
  • லாக் (Lock) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • திரை தோன்றும். அதில் புதிய பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்.
  • பிறகு ஆல்டர்நேட் தொடர்பு எண் (வேறு மொபைல் நம்பர்) கொடுக்க வேண்டும்.

Related posts

இன்டர்நெட் வசதி இல்லாமல் ‘பேடிஎம்’ ஆப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

ஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி?

TechNews Tamil

இலவச மருத்துவ ஆலோசனைக்கு வீடியோ கால் மூலம் மருத்துவரை தொடர்பு கொள்வது எப்படி?

TechNews Tamil