வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களின் ஸ்டேட்டஸை நம்மால் பார்க்க மட்டுமே முடியும், அது புகைப்படங்களாக இருந்தாலும் சரி, வீடியோக்களாக இருந்தாலும் சரி நம்மால் டவுன்லோடு செய்ய முடியாது. ஆனால் இவற்றை டவுன்ட்லோடு செய்வதற்கென பிரத்தியேக செயலிகள் உள்ளன.
அதாவது இந்த செயலிகள் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. அதாவது வாட்ஸ் ஆப் வீடியோ அல்லது புகைப்பட ஸ்டேட்டஸ்களை டவுண்ட்லோடு செய்ய பல செயலிகள் பயன்பாட்டில் இருந்தாலும் பிரபல செயலியாக இருப்பது Story Saver for Whatsapp ஏ.பி.கே. செயலி ஆகும்.

1. பிளே ஸ்டோரில் இந்த செயலியினை டவுண்ட்லோடு செய்டு இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
2. மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அது தானாக வாட்ஸ்அப் அக்கௌன்ட் உடன் இணைந்து விடும்.
3. ரீசென்ட்ஸ் ஸ்டோரிஸ் அம்சத்தை க்ளிக் செய்து உங்களுக்கு டவுன்லோடு செய்யப்பட வேண்டிய ஸ்டோரியை க்ளிக் செய்ய வேண்டும்.
4. அடுத்து டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்தால் டவுன்ட்லோடு ஆகிவிடும்.