How to

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?

நீங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்க்கும் போதே அவை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு ஆகியிருக்கும். அதனால் தான், ஸ்டேட்டஸ் பார்த்தப் பிறகு, மொபைல் டேட்டா இல்லாவிட்டாலும், அந்த ஸ்டேட்டஸ் வீடியோவை நம்மால் பார்க்க முடியும். 

இவ்வாறு நமது மொபைலில் ஆட்டோமெட்டிக்காக டவுன்லோடு ஆகும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், எங்கு டவுன்லோட் ஆகியுள்ளது என்பது தான் பலருக்கும் தெரியாது. இதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். 

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?

1. முதலில் உங்கள் போனில் உள்ள File Manager ஓபன் செய்ய வேண்டும். 
2. இப்போது File Managerல் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 
3. அதில் Show Hidden Files என்று இருக்கும். அதை டிக் செய்து கொள்ள வேண்டும். 
4. இப்போது போன் மெமரியில் பின்வரும் பகுதிக்குச் செல்ல வேண்டும். 
5. File Manager > Phone Memory > WhatsApp > Media > .Statuses 
6. இந்த ஃபோல்டரில் நீங்கள் அண்மையில் பார்த்த வாட்ஸ்அப ஸ்டேட்டஸ், போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் இருக்கும். 
7. இதனை Copy செய்து உங்களுக்கு எங்கு, எந்த Folder இல் வேண்டுமோ அங்கு Paste செய்து கொள்ளலாம். 

சிலரது போன்களில் File Manager என்பது வேறு பெயர்களில் இருக்கும். அதாவது Storage Manager, My Phone என்று இருக்கும். அதை தேர்வு செய்து மேற்கண்ட முறைகளில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எடுக்கலாம். 

Related posts

ரேஷன் கார்டில் தொலைபேசி எண்ணை பதிவு செய்வது எப்படி?

TechNews Tamil

ZIP பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி?

TechNews Tamil

யூஏஎன்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?

TechNews Tamil