ஆதார் கார்டை இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணைய பக்கத்தினை ஓப்பன் செய்யவும்.
- ஓப்பன் செய்து Aadhaar என்பதைத் தேர்வு செய்துவிட்டு, Regular Aadhaar என்பதைத் தேர்வு செய்யவும்.
- ஆதார் எண், பெயர், பின் கோடு ஆகியவற்றை உள்ளிடவும்.
- அடுத்து பாதுகாப்புக் குறியீட்டு எண்களை டைப் செய்யவும்.
- மொபைலில் உள்ள mAadhaar அப்ளிகேஷனில், Do you have TOTP என்பதைத் செலக்ட் செய்யவும். இதன்மூலம் mAadhaar அப்ளிகேஷனில் டிஜிட்டல் பாஸ்வேர்டு கிடைக்கும்.
- அதை Enter TOTP என்ற இடத்தில் உள்ளிடவும்.
- Download Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆதார் கார்டை டவுன்லோட் செய்துவிடலாம்.
- மற்றொரு ஆப்சனாக Do you have TOTP என்பதை செலக்ட் செய்யாமல், Request OTP என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்டு வரும்.
- அதை Enter OTP என்ற இடத்தில் உள்ளிட்டு, Download Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும், அப்போது ஆதார் கார்டி டவுன்லோட் ஆகிவிடும்.