1.முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் Sticker maker for WhatsApp என்ற ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
2. அதன் உள்ளே `Create a new stickerpack’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால், ஸ்டிக்கர் தொகுப்பின் பெயரானது கேட்கப்படும்.
3. ஸ்டிக்கரின் Author பெயர் நீங்கள் கொடுக்க வேண்டும், அப்போது ஒரு Folder ஓப்பன் ஆகும்.

4. அந்த ஃபோல்டரில் Empty Tray கள் இருக்கும். இதில் Tray Icon என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
5. கிளிக் செய்தவுடன் நம்முடைய கேமரா மற்றும் ஃபைல் மேனேஜர்களுக்கான அனுமதியை ஆப் கேட்கத் துவங்கும். அதை சரி என கொடுக்கவும்.
6. அதன்பின்னர் ஒவ்வொரு ஸ்டிக்கர் ஐகானையும் க்ளிக் செய்தால், புதிதாக ஒரு இமேஜை ஃபைல் மேனேஜரில் இருந்து இங்கு பேஸ்ட் செய்ய முடியும்.
7. இமேஜை லோட் செய்ததும், அந்த இமேஜில் கிராப் செய்ய வேண்டுமெனில் செய்து கொள்ளலாம்.
8. இதேபோல் மூன்று ஸ்டிக்கர்களை கிரியேட் செய்தால் மட்டுமே வாட்ஸ்அப்புடன் இணைக்க முடியும்.
9. இறுதியில் நாம் உருவாக்கிய ஸ்டிக்கரை உள்ளிட, Publish Sticker Pack என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
10. ஸ்டிக்கர் பேக் இப்போது நம் வாட்ஸ்அப்புடன் இணைக்கப்பட்டுவிடும்.
பின்னர் இந்த ஸ்டிக்கர் களை வழக்கம் போல வாட்ஸ்அப் கீ-போர்டு பகுதிக்குச் சென்று பார்க்க முடியும். அவ்வளவு தான்!