ZIP பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி என்பதுபற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
- முதலில் உங்களுக்கு தேவையான பைல்களை எல்லாம் ஜிப் பைலாக மாற்ற வேண்டும்.
2. அடுத்து winzip என்ற ஆப்பை ஒப்பன் செய்யவும். அதில் Encrypt என்னும் கட்டத்தில் டிக் செய்யவும். அடுத்தாக zip என்னும் ஐகானை தேர்வு செய்யவும், ஒரு புதிய விண்டோவானது தோன்றும், இதில் ஜிப் பைலை தேர்வு செய்து Zip என்னும் பட்டனை அழுத்தவும்.
3. Zip பட்டனை அழுத்தியதும், பாஸ்வேர்டு உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும்.
4. அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.

5. அடுத்து 2 வதாக தோன்றும் விண்டோவில் பாஸ்வேர்டு உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே பட்டனை அழுத்தவும்.
6. நாம் சொன்ன இடத்தில் உள்ள ஜிப் பைலுடன் அந்த பாஸ்வேர்டு இணைக்கப்பட்டுவிடும்.
இனி இதேபோல் தேவைப்படும்போது பைல்களை இனைத்துவிடவும்.