How to

ஜிமெயில் அக்கௌண்ட் ஒப்பன் செய்வது எப்படி?

ஒருவரை மற்றவர்களுடன் இணைக்க 1000 வழிகள் உள்ளன, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பவோ செய்யலாம்.

அப்படி இருக்க ஜிமெயிலின் தேவை என்ன? அலுவலகங்களில் இதன் பயன்பாடு இன்னும் இருக்கவே செய்கிறது. அனைத்து பரிமாற்றங்களும் இதன் வழியே நடக்கிறது.

கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பிரௌசரில் www.gmail.com இணையதளத்திற்கு செல்லவும்.

ஜிமெயில் அக்கௌண்ட் ஒப்பன் செய்வது எப்படி?

அங்கு உள்ள பக்கத்தில் More Options என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது உள்ள ஆப்சன்களில் Create Account என்பதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்ததும் ஒரு பெரிய பக்கம் தோன்றும், அதில் Name, Choose your username, create a password போன்ற  அனைத்து கட்டங்களையும் நிரப்பவும். 

இறுதியாக Next Step என்பதை கிளிக் செய்யவும்.  அதன்பின்னர் Privacy and Terms தோன்றும். 

அதில் I Agree கொடுக்கவும். பிறகு அடுத்து தோன்றும் பக்கத்தில் உங்களுடைய மொபைல் எண் கொடுக்கவும்.

வெரிபிகேஷன் கோடு Text Message / Voice Call என்பதில் எது உங்களுக்கு பொருத்தமானதோ அதை தேர்வு செய்து Continue கொடுக்கவும். 

உங்கள் மொபைல் போனுக்கு ஒரு வெரிபிகேஷன் கோடு வரும். அதை அந்த காலி இடத்தில்  உள்ளிட்டால், வெரிபிகேஷன் முடிந்துவிடும். ஜிமெயில் அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிட்டது.


Related posts

கூகுள் க்ரோம் கொண்டு ஸ்கேன் செய்வது எப்படி?

TechNews Tamil

MP3 பாடலில் போட்டோ set பண்ணுவது எப்படி?

TechNews Tamil

யூ டியூப் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

TechNews Tamil