இணையத்தை உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக தொடர்புகொள்ள இயலாத நேரங்களில் உங்கள் லேப்டாப்பினையே வை-பை ஹாட்ஸ்பாட் ஆக பயன்படுத்தலாம்.
சில ஆப்ஸ்கள் மூலம் உங்கள் லேப்டாப்பை வைபை யாக மாற்றி பயன்படுத்தலாம்.அதற்கு முன் உங்கள் லேப்டாப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிற விண்டோஸ் இதற்கு ஏற்றதா என்பதனை தெரிந்துகொள்ளுங்கள்.விண்டோஸ் 7,8 மற்றும் 8.1 ஆகியவற்றில் நாம் இந்த வசதியினை பயன்படுத்தலாம்.

ஸ்டெப் 1:
கனெக்ட்டிபை என்கிற செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.அதன் பிறகு கணினியை ரிஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள்.
ஸ்டெப் 2:
ரீஸ்டார்ட் செய்த பிறகு கணினி இணையத்துடன் கனெக்ட் ஆகிறதா என சோதித்துக்கொள்ளுங்கள்.
ஸ்டெப் 3:
இப்போது கனெக்ட்டிபை செயலியை திறந்து செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று வை-பை என்கிற வசதியினை உருவாக்கிக்கொள்ளுங்கள்
ஸ்டெப் 4:
இப்போது உங்களுக்கான கடவு எண்ணை உருவாக்கிக்கொண்டு பிறருடன் டேட்டா வினை பகிர்ந்துகொள்ளலாம்.அதாவது வை-பை ஆக பயன்படுத்தலாம்.