நாம கஷ்டப்பட்டு பேப்பரில் எழுதின எழுத்துகளை லென்ஸ் கொண்டு டிஜிட்டலாக மாற்றலாம். அதாவது இந்த Google Lens மூலம் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் டிஜிட்டலாக மாற்றலாம். டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி சேவ் செய்துகொள்ளலாம்.

1. முதலில் கூகிள் லென்ஸ் செயலியை ஓப்பன் செய்யவும்.
2. அடுத்து கூகிள் செயலியில்ல் உள்ள லென்ஸ் பட்டனை கிளிக் செய்யவும்.
3. நீங்கள் காகிதத்தில் எழுதியுள்ள கையெழுத்துகளை மீது உங்கள் கூகிள் லென்ஸ் கேமராவை காட்டவும்.
4. எழுத்துக்களுக்கு நேராக கேமராவை வைத்து ஒரு புகைப்படத்தை எடுக்கவும்.
5. இப்போது எழுத்துக்கள் டிஜிட்டலாக மாறி இருக்கும்
6. அடுத்து கீழே தோன்றும் copy to computer என்ற ஆப்சஐக் கிளிக் செய்யவும்.
7. இப்போது கையெழுத்த்து கணினியில் நகலாக மாறி இருக்கும்.
8. இதை எங்கும் பேஸ்ட் செய்து சேமிப்பித்துப் பயன்படுத்த முடியும்.