இந்தியாவில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, மத்திய சுகாதார துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆன்லைன் வழி இயங்கும் eSanjeevani OPD சேவையை துவங்கி உள்ளது.
இந்த சேவையின்மூலம் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாது மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது.

1. பயனர் மொபைல் போன் நம்பரை ஓடிபி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
2. அடுத்து மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
3. பூர்த்தி செய்த பின்னர் உங்களுக்கான ஐடி வழங்கப்படும்
4. அதன்பின்னர் மருத்துவ ஆலோசனைக்காக டோக்கன் பெற வேண்டும்
5. நம்முடைய மருத்துவரீதியான விவரங்களைப் பூர்த்தி செய்ததும், ஐடி மற்றும் டோக்கன் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்
7. அடுத்து இசஞ்சீவனி ஒபிடி மூலம் லாகின் செய்ய கோரி எஸ்எம்எஸ் அனுப்பப்படும்
8. அதன்பின்னர் ஐடியின்மூலம் லாக் இன் செய்ய வேண்டும்
9. நோயாளிகளின் டோக்கன் எண்ணிற்கு ஏற்ப இசஞ்சீவனி ஒபிடி மருத்துவரை நியமிக்கும்
11. மருத்துவர் நியமிக்கப்பட்ட பின்னர், நோயாளிக்கு இப்போது கால் செய்யவும் என்னும் பட்டன் செயல்பாட்டிற்கு வரும்.
12. நாம் அதன்மூலம் கால் செய்து மருத்துவருடன் வீடியோவில் பேசலாம்.