பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். இப்போது நாம் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1.முதலில் https://www.incometaxindiaefiling.gov.in என்பதை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
2. அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் ஆப்சனை க்ளிக் செய்யவும்.
3. அடுத்து பான் மற்றும் ஆதார் விவரங்கள் குறித்த பக்கம் ஓப்பன் ஆகும்.
4. அங்கு பான், ஆதார் எண் மற்றும் பிற விவரங்களை பதிவிட வேண்டும்.

5. அடுத்து அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code இனை நிரப்பவும்.
6. பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.
7. மொபைலுக்கு வந்த ஓடிபியினை வலைதளத்தில் உள்ளிடவும்.
8. இறுதியில் அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.