
- பட்டா ஆன்லைனில் சரிபார்க்க http://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தினை ஓப்பன் செய்யவும்.
- அடுத்து அதில் நில உரிமை விபரங்களை பார்வையிட என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து பட்டா அல்லது சிட்டா ஆகியவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்களான மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் பட்டா எண் ஆகியவற்றினை குறிப்பிடவும்.
- இல்லையேல் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
- இப்போது உங்கள் பட்டா குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்ட பின், உங்களுடைய தகவல்கள் வரும், அதனை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.