How to

பான்கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பான் கார்டில் பெயர், புகைப்படம், பிறந்ததேதி தவறாக இருந்தால் மாற்றம் செய்யலாம்.

பெயர் மாற்றத்திற்கான அரசாணை, திருமண பத்திரிக்கையுடன் திருமண சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவை.

புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் இதற்கும் தேவை. அடையாள அட்டை, இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் போன்றவை.

பான்கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  1. https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html அல்லதுhttps://www.utiitsl.com/UTIITSL_SITE/pan/#six மூலம் விண்ணப்பிக்கலாம்.
  2. கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று ‘Application type’ என்ற மெனுவை கிளிக் செய்து ‘ Changes or correction in existing PAN data/ Reprint of PAN Card (No changes in existing PAN data) தேர்வு செய்யவும். பின்னர் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து, Captcha வை உள்ளீடு செய்து ‘ Submit’ ஐ கிளிக் செய்யவும்.
  3. அடுத்த நிலையில், எந்த வழியில் ஆவணங்களை சமர்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம்.e-KYC மூலம் செய்வதற்கு ஆதார் கார்டும், e-sign மூலம் சமர்பிக்க ஸ்கேன் செய்த ஆவணங்களும் தேவை.

4. சிவப்புநட்சத்திரமிட்ட பீல்டுகளில் தகவலை உள்ளீடு செய்து ‘Next’ ஐ கிளிக் செய்யவும்.

5. தனிநபர் தகவல்களை சிவப்பு நட்சத்திரமிட்ட பீல்டுகளில் தகவலை உள்ளீடு செய்து ‘Next’ ஐ கிளிக் செய்யவும்.ஆதாரில் உள்ளபடியே தகவல்களை உள்ளீடு செய்யவும். தவறாக இருந்தால் பணம் திருப்பியளிக்கப்பட மாட்டாது.

6. விண்ணப்பத்துடன் சமர்பிக்க விரும்பும் ஆவணத்தை தேர்வு செய்யுங்கள். E-KYC கிளிக் செய்து தகவல்களை உள்ளீடு செய்து ‘ Proceed’ ஐ கிளிக் செய்யவும்.

7. பான்கார்டு திருத்தம் அல்லது மறுபதிப்பு செய்ய ரூ120 கட்டணமாகும். ‘Pay confirm’ ஐ கிளிக் செய்யவும்.

8. பேமெண்ட் தகவல்களை அளித்து செயல்முறையை முடிக்கவும். பணபரிவர்த்தனை முடிந்தபின் வங்கி அடையாள எண் மற்றும் பரிவர்த்தனை எண் வழங்கப்படும். பின்னர் ‘continue’ கிளிக் செய்யவும்.

9. பின்னர் ஆதார் மூலம் சரிபார்க்க வேண்டும். ஆதார் எண்ணுக்கு கீழே உள்ள பெட்டியை டிக் செய்து ‘ Authenticate’ என்பதை கிளிக் செய்யவும். ஆதாரில் உள்ள தகவல்கள் உங்கள் தகவலுடன் ஒத்துப்போனால் ‘ Continue with e-sign / e-KYC ‘ ஐ கிளிக் செய்யலாம்செக் பாக்ஸ் ஐ டிக் செய்து ‘ Generate OTP’ கிளிக் செய்யவும்.

10. பின்னர் OTP யை உள்ளீடு ‘Submit’ ஐ கிளிக் செய்யவும். உடனே சமர்பித்த விண்ணப்பம் உள்ள பக்கத்திற்கு செல்லும். இதை PDF வடிவில் மாற்றி பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும்.

11. மின்னஞ்சல் வழியாகவும் ஒப்புகை கிடைக்கும். இந்த செயல்முறை மூலம் ஃபான் கார்டில் திருத்தம் அல்லது மறுபதிப்பு செய்யலாம். விண்ணப்பம் பரிசீலக்கப்பட்ட பின்னர் பான்கார்டு பிரிண்ட் செய்யப்பட்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

Related posts

ஜியோ ஃபைபர் சேவைக்கான முன்பதிவினை எப்படி செய்வது?

TechNews Tamil

ஸ்மார்ட்போன் Hang ஆவதை சரி செய்வது எப்படி?

TechNews Tamil

ஹார்ட் டிஸ்கில் உள்ள ஃபைலை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

TechNews Tamil