ஆன்லைனில் Passport அப்ளை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
1. passportindia.gov.in என்ற தளத்தில் நுழைந்து ஆர்டினரி ஆப்ஷன் என்பதை க்ளிக் செய்யவும்.
2. அதில் Register Now என்பதை க்ளிக் செய்யவும்.
3. அடுத்தப் பக்கம் open ஆகும், அதில் விண்ணப்பதாரர்களுக்கான முதல்நிலை விண்ணப்பம் வரும். அதனை பூர்த்தி செய்யவும்.

4. அடுத்து, login id, password கொண்டு உள் நுழையவும்.
5. அடுத்து, Apply for New Passport என்பதைக் க்ளிக் செய்யவும்.
6. அதில் உள்ள அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்யவும், சரிபார்த்து Submit கொடுக்கவும்.
7. அடுத்து Pay and Schedule Appointment என்பதைக் க்ளிக் செய்யவும்.
8. அப்போது புதிய பக்கம் open ஆகும், அதில் பணம் செலுத்தவும்.
9. அடுத்து அப்பாயின்மெண்டையும் உறுதி செய்து கொள்ளவும்.
10. உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் எஸ்.எம்.எஸ் ஐ பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லவும்.