ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் என்றாலே அதற்கு தனி மவுசுதான் எப்போதும் இருக்கும், மற்ற பிராண்டுகளைவிட விலை அதிகமாக இருந்தாலும் பலரும் இதனை விரும்பி வாங்கக் காரணம் அதன் தரத்தினால்தான்.
ஆப்பிள் நிறுவனம் போன், வாட்ச் என பல வகையான எலெக்ட்ரானிக் பொருட்களை அதிக விலையில் வெளியிட்டாலும் அவ்வப்போது ஓரளவு சுமாரான விலையிலான பொருட்களையும் வெளியிட்டு நடுத்தர மக்களையும் மகிழ்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் மக்கள்களால் அதிகம் விரும்பப் படும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சினை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய நினைத்து குறைந்தவிலையில் ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலை செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது.

இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் தற்சமயம் உலகின் பலநாடுகளிலும் விற்பனையாகி வருகின்றது. இதனை மிகப் பெரும் ஆர்வத்தில் வாங்கிப் பயன்படுத்திய பயனர்கள் தற்போது பெரும் அதிருப்தியிலேயே உள்ளனர்.
அதாவது இந்த வாட்ச் எஸ்இ மாடல் பிரச்சனை அதிக அளவு சூடாகும் தன்மை கொண்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் சூடாக இருப்பதாக புகார் கூறிய பயனர்கள் மூவருக்கு ஆப்பிள் வாட்ச் மாடலுக்கான பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச் எஸ்இ சார்ஜ் செய்யும் போதும், கையில் அணிந்திருக்கும் போதே வாட்ச் சூடகின்றது என்றும் புகார்கள் எழுந்துள்ளன.