மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் ஹானர் 10 எக்ஸ் லைட் என்ற ஸ்மார்ட்போன் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் எமரால்டு க்ரீன், ஐஸ்லாந்திக் ஃப்ரோஸ்ட் மற்றும் மிட்நைட் கருப்பு போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.
ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழுவியூ ஃபுல் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டதாக உள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மேஜிக் யுஐ3.1 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இயங்கும் வசதி கொண்டுள்ளது.
மேலும் இது 512 ஜிபி வரை மெமரியினை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது. கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை ஹானர் 10 எக்ஸ் லைட் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் போன்றவற்றினையும் 8 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினையும் 5,000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 22.5W வேக சார்ஜிங் அம்சம் கொண்டதாகவும் உள்ளது.