Mobile

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்!

ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் பிளே 9ஏ என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகமாகி உள்ள நிலையில் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ12,720

ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹிலீயோ பி335 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும், இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி /128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

Related posts

டிசம்பர் மாதம் அறிமுகமாகும் சியோமியின் மி சிசி9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil