Mobile

வெறும் ரூ.12,900 மதிப்பில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 4 டி ஸ்மார்ட்போன்!!

Honor நிறுவனம் தனது ஹானர் பிளே 4 டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

1.      Honor Play 4T ஸ்மார்ட்போனின் அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – (இந்திய மதிப்பில்) ரூ.12,900

ஹானர் ப்ளே 4 டி ஸ்மார்ட்போன் ஆனது மேஜிக் யுஐ 3.1 உடன் Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும் இது 6.39 இன்ச் ஃபுல்-எச்டி உடன் 720×1560 பிக்சல்கள் ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த போன், ARM Mali-G51 GPU மற்றும் 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 710A SoC யைக் கொண்டுள்ளது.

வெறும் ரூ.12,900 மதிப்பில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 4 டி ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும், முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

மேலும் இது, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை நீட்டிக்கக்கூடியதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

ஹானர் ப்ளே 4 டி ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

12000 ரூபாய் ஆஃபரை அறிவித்த சாம்சங் எஸ் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

TechNews Tamil