Mobile

ரூ.16,200 விலையில் அறிமுகமானது ஹானர் பிளே 4 டி புரோ ஸ்மார்ட்போன்!!

Honor நிறுவனம் தனது ஹானர் பிளே 4 டி புரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

1.      Honor Play 4T Pro ஸ்மார்ட்போனின் அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – (இந்திய மதிப்பில்) ரூ.16,200

2.      Honor Play 4T Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை- (இந்திய மதிப்பில்) சுமார் ரூ.18,400

ஹானர் ப்ளே 4 டி புரோ ஸ்மார்ட்போன் ஆனது மேஜிக் யுஐ 2.1 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும் இது 6.3 இன்ச் ஃபுல்-எச்டி உடன் 1,080×2,400 பிக்சல்கள் ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

ரூ.16,200 விலையில் அறிமுகமானது ஹானர் பிளே 4 டி புரோ ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த போன், ARM Mali-G52 MP6 GPU மற்றும் 8 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் HiSilicon Kirin 810 SoC யைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

மேலும் இது, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக்கூடியதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

ஹானர் ப்ளே 4 டி ப்ரோ ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

அறிமுகமானது எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

செப்டம்பர் 25 இல் அறிமுகமாகும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ. 9999 க்கு அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான Tecno Camon 12 Air!

TechNews Tamil