Mobile

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ்!!

ஹானர் மொபைல்ஸ்  நிறுவனம் 8 ஜிபி ரேம் மெமரியுடன் மிகவும் அசத்தலான ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை நாளை சீனாவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் லைட் சில்வர், ரேசிங் ப்ளூ, ஸ்பீட் பிளாக் என மூன்று வண்ணங்களில் வெளிவரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7.09 இன்ச் முழு எச்.டி. டிஸ்ப்ளே வடிவமைப்பினைக் கொண்டதாக உள்ளது.

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ்!!

மேலும் இந்த ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 800 5 ஜி, எஸ்.ஓ.சி. இயங்கு தளத்தை கொண்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 3.5 எம்.எம்.  ஆடியோ ஜக், டைப் சி யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 22.5 வாட்ஸ் வேகமான  சார்ஜிங்கிற்கு இந்த பேட்டரி சப்போர்ட் செய்வதாக உள்ளது. மெமரியைப் பொறுத்தவரை, 6 ஜி.பி. ரேம்/ ஜிபி ரேம், 64 ஜி.பி./ 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

Related posts

ரூ. 15,000 ரூபாயில் வெளியாகும் Vivo Y5s!

TechNews Tamil

இன்றுமுதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6!

TechNews Tamil

களமிறங்கத் தயார் நிலையில் நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil