Mobile

ஹானர் நிறுவனம் ஜனவரி 18 ஆம் தேதி வெளியிட உள்ள ஹானர் வி40!!

ஹானர் நிறுவனம் வி40 5 ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாக உள்ளது. இந்த ஹானர் வி40 ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் வி40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72 இன்ச் எல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 236 x 2676 பிக்சல் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாகவும், மேலும் 300 ஹெர்ட்ஸ் டச் திறனைக் கொண்டதாகவு உள்ளது.

ஹானர் நிறுவனம் ஜனவரி 18 ஆம் தேதி வெளியிட உள்ள ஹானர் வி40!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி போன்ற இரண்டு சேமிப்பு வசதிகளில் வெளியாகியுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 66 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 எம்பி கேமரா, 32 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

Related posts

மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளஸ்!

TechNews Tamil

ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!!

TechNews Tamil

வெறும் ரூ.6,299 மட்டுமே… அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil