Mobile

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள்து. M2101K6I மாடல் எண் கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம். மேலும் இது குவாட்-கேமரா அமைப்பினைக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் கொண்ட சாம்சங் எஸ் 5 கேஜிடபிள்யூ கேமராவாக இருக்கலாம் என்றும், 64MP சென்சார் அல்ட்ரா-வைட் சென்சார், மேக்ரோ கேமரா மற்றும் டெப்த் சென்சார் போன்றவை கொண்டு இருக்கலாம் என்றும் தெரிகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் NFC ஆதரவினைக் கொண்டதாகவும், 5050mAh சக்தி கொண்ட பேட்டரி கொண்டதாகவும் இருக்கலாம் என்று தெரிகின்றது.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை Wi-Fi, NFC, ப்ளூடூத், MIUI 12 போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.

Related posts

ஒரு வழியாக அறிமுகமானது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil

48 மெகாபிக்சல் கேமராவுடன் சாம்சங் கேலக்சி M30s அறிமுகம்!

TechNews Tamil