Honor V30 நவம்பர் 26 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இது இரண்டு வகைகளில் வெளியாக உள்ளது.
- Honor V30 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வகை= ரூ. 33,000
- Honor V30 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வகை= ரூ. 37,000
Honor V30 ஸ்மார்ட்போன் side-mounted fingerprint சென்சார் கொண்டு உள்ளது. மேலும் இது, Magic UI 3.0.1 உடன் Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

மேலும் இது 6.57 இஞ்ச் full-HD உடன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் 8GB RAM மற்றும் 128GB உள்ளடக்க மெமரியுடன் Kirin 990 SoC கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் டூயல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் wide-angle shooter, 40 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் telephoto shooter, 12 மெகாபிக்சல் wide-angle கேமரா, 8 மெகாபிக்சல் telephoto லென்ஸ், 32 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
5G, 4G LTE, Wi-Fi a/b/g/n/ac, Bluetooth 5.1, GLONASS, BeiDou, GPS/A-GPS மற்றும் NFC போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது, 4,200mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.