ஹானர் நிறுவனம் சீனாவில் ஹானர் மேஜிக்புக் 15 என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஹானர் மேஜிக்புக் 15 சாதனம் புத்தாண்டை ஒட்டி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.
- ஹானர் மேஜிக்புக் 15 மாடலின் ஆரம்ப விலை – ரூ.49,719
இந்த லேப்டாப் 15.6 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1920 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இந்த லேப்டாப் மாடல் 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 உடன் என்விடியா எம்எக்ஸ் 250 ஜி.பீ.யு கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மெமரி வகையினைப் பொறுத்தவரை 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது விண்டோஸ் 10 ஹோம் எடிஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாகவும் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த லேப்டாப் வைஃபை, புளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.0 டைப்-ஏ, எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 42வாட் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இதன் எடையானது 1.53கிலோ எடை கொண்டுள்ளது. மேலும் 65வாட் பவர் அடாப்டர் கொண்டதாகவும் உள்ளது.