ஹானர் நிறுவனம் மேஜிக் புக் 15 லேப்டாப் மாடலினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் ஆனது ஜூலை 31 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹானர் மேஜிக் புக் 15 லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். மேலும் ஹானர் மேஜிக் புக் 15 லேப்டாப் ஆனது 15.6 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1920 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த லேப்டாப் ஆனது இரண்டாம் தலைமுறை ஏஎம்டி ரெய்ஸன் 5ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. இது சிறப்புமிக்க அம்சமாக புல்வியூ டிஸ்ப்ளே வசதியினையும் பாப் அப் வெப் கேமராவினையும் கொண்டுள்ளது.
இது ரேடியான் RX வேகா 10 கிராபிக்ஸ் மூலம் இயங்குவதாகவும் உள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 8 ஜிபி டிடிஆர் 4 ரேம் மற்றும் 512 ஜிபி பிசிஐஇ எஸ்எஸ்டி உடன் வருகிறது.
மேலும் இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை இரட்டை இசைக்குழு வைஃபை, புளூடூத் 4.2, 1 x யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் ஏஎம்டி பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.