ஹானர் நிறுவனம் தற்போது ஒரு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ள நிலையில், இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு பை சார்ந்த EMUI 9.1.1 இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியது.

இது கிரின் 810 ஆக்டா கோர் பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இத்துடன் முன்புறத்தில் 16 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., டூயல் சிம் ஸ்லாட் கொண்டதாக உள்ளது.