Mobile

பொங்கலை ஒட்டி அறிமுகமாகவுள்ள ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஜனவரி 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கலை ஒட்டி அறிமுகமாகவுள்ள ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன்கள் 6.59 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இது ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி கொண்டதாகவும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதி கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது முன்புறத்தில் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அதிரடியான ஐபோன் 11 இன் சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil

புத்தாண்டை ஒட்டி வெளியாக காத்திருக்கும் கேலக்ஸி ஏ51!

TechNews Tamil

சீனாவில் ஹூவாய் பாக்கெட் S போல்டபில் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil