ஹானர் 9S ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஹானர் 9S ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் 9S ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஆக்டாகோர் மீடியா டெக் MT6762R SoC பிராசசர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் மேஜிக் UI 3.1உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்பில்டு மெமரியும், 512 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் உள்ள கேமரா 8 மெகா பிக்சலுடனும், முன்புறத்தில் உள்ள செல்ஃபி கேமரா 5 மெகா பிக்சல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவினையும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3,020 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.