Mobile

சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

ஹூவாயின் ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனை ரஷியாவில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 23 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும் கொண்டுள்ளது, மேலும் இது 1600×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

கேமராவைப் பொறுத்தவரையில் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

அக்டோபர் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Moto G8 Plus அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கிய விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil