ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மே 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹானர் 9 சி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி உள்ளடக்க மெமரி விலை- (இந்திய மதிப்பில் ரூ.13,300)
இந்த ஸ்மார்ட்போன் ஆனது Android 9 உடன் EMUI 10.1.1 கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.20 டிஸ்பிளே கொண்டதாகவும், இது 720×1,560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் கிரின் 710A SoC கொண்டு இயங்குவதாய் உள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இது, 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 64 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.
இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை கூடுதலாக நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா கொண்டுள்ளது. முன்புறத்தில், 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இந்த போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.