Mobile Uncategorised

ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

ஹூவாயின் ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனை ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1600×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மறறும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஒப்போ ஏ5 2020!!

TechNews Tamil

பிலிப்பைன்ஸில் அறிமுகமானது விவோ 19 நியோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு MIUI 11 அப்டேட்!

TechNews Tamil