Mobile

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!!

ஹானர் நிறுவனம் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்களை சீனாவில் நாளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ஃபேண்டம் புளூ நிறத்தில் வெளிவரவுள்ளது.  இந்த ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது,  ஐஎம்ஜி பவர் விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும்,  மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம்,  64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!!

இது மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்டராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1 வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் பின்புறத்தில் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா,  5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

அசர வைக்கும் அம்சங்களுடன் ஓப்போ எஃப்17 ஸ்மார்ட்போனை !!

TechNews Tamil

ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியான லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன்!!

TechNews Tamil

விற்பனைக்குத் தயாரான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil